சுடச்சுட

    

    பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி

    By பாரீஸ்,  |   Published on : 24th October 2015 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    35

    பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார்.
    பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், தாய்லாந்தின் ரட்சனாக் இனாடனனை எதிர்கொண்டார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், உலகத் தரவரிசையில் 7-ஆவது இடத்திலுள்ள ரட்சனாக்கிடம் 21-9, 21-15 என்ற செட் கணக்குகளில் சாய்னா நெவால் தேல்வியைத் தழுவினார்.
    அண்மையில் முடிந்த ஜப்பான் மற்றும் டென்மார்க் ஓபன் போட்டிகளிலும் சாய்னா நெவால் முன்கூட்டியே வெளியேறியது அவரது தரவரிசை சரிவுக்கு காரணமாக அமைந்தது. தற்போது பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் காலிறுதியோடு வெளியேறியுள்ளார்.
    இதைத் தொடர்ந்து இத்தொடரில் இந்தியர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
    முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய், இரண்டு முறை டச்சு ஓபன் சாம்பியனான அஜய் ஜெயராம் ஆகிய இந்திய வீரர்கள் 2-ஆவது சுற்றுடன் தோல்வி கண்டு வெளியேறினர்.
    இதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் வெற்றியை இழந்து வெளியேறியது.





     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai