Enable Javscript for better performance
மணிப்பூர் முதல்வருக்கு மேரிகோம் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மணிப்பூர் முதல்வருக்கு மேரிகோம் கோரிக்கை

    By  புது தில்லி,  |   Published on : 24th October 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணிப்பூர் மாநிலத்தில் தாம் நிறுவியுள்ள குத்துச் சண்டை அகாதெமிக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி அந்த மாநில முதல்வருக்கு இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் கோரிக்கை விடுத்துள்ளார்.
     இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் (32), மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள லங்கால் கிராமத்தில் குத்துச்சண்டை அகாதெமியை நிறுவி வருகிறார்.
     கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மேரிகோம் வெண்கலம் வென்ற பிறகு, அவரது கனவுத் திட்டமான குத்துச்சண்டை அகாதெமியை நிறுவ மணிப்பூர் மாநில அரசு, 3.3 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. கடந்த ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த மேரிகோம், தனது குத்துச் சண்டை அகாதெமி பணிகள் முடிவடைந்த பின்னர் அதனை திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
     பிரதமரும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
     இந்நிலையில், தற்போது பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த குத்துச் சண்டை அகாதெமிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அதனை சீரமைக்க கோரி மாநில முதல்வர் இபோபி சிங்குக்கு மோரி கோம் கடிதம் எழுதியுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai