சுடச்சுட

    
    ISL

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் புணே அணியை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி.

    ஐஎஸ்எல் கால்பந்துத் தொடரில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற 20-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி புணே சிட்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மென்டி (33-ஆவது நிமிடம்), மெண்டோஜா (48-ஆவது நிமிடம்) ஆகியோர் சென்னை அணிக்கு கோல் அடித்து உதவினர்.

    பதிலுக்கு எதிரணி தரப்பில் 74-ஆவது நிமிடத்தில் புணே அணி வீரர் உசி கோல் அடித்தார். முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி, உள்ளூரில் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக புணே அணியில் லென்னி ரோட்ரிக்கியூஸýக்குப் பதிலாக மணிஷ் மிதானி அணியில் இடம் பெற்றார்.

    சென்னை அணியில் 6 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்திலேயே சென்னைக்கு கிடைத்த வாய்ப்பை மேனுலி பிளாசி "ஃபவுல்' செய்து தவறவிட்டார்.

    26-ஆவது நிமிடத்தில் புணே அணிக்கு "ஃப்ரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. அப்போது 35 யார்டு தொலைவில் இருந்து நிக் ஷோரி அடித்த பந்து, மெயில்சன் இடைமறித்து தடுத்தார்.

    33 ஆவது நிமிடத்தில் தனச்சந்திரா சிங் நீண்ட தொலைவில் இருந்து அடித்த பந்தை மென்டி அபாரமாக தலையால் முட்டி கோலாக்கினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்தது.

    இரண்டு பாதியின் தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு கூடுதலாக ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. 48-ஆவது நிமிடத்தில் புணே அணி வீரர்கள் பந்தை இலானோ வசம் இழந்தனர். அதனை அவர், மெண்டோஜாவை நோக்கி பாஸ் செய்தார்.

    6 யார்டு தொலைவிலிருந்து அந்த பாûஸ அபாரமாக கோல் வலைக்குள் திருப்பினார் மெண்டோஜா.

    இதனால் புணே அணிக்கு நெருக்கடி கூடியது. அந்த அணியின் பதிலடி முயற்சி 74-ஆவது நிமிடத்தில் கைகூடியது. புணே அணியின் தர்மராஜ் ராவணன் தலையால் முட்டிய பந்தை சென்னை கோல் கீப்பர் கரண்ஜித் தடுக்க முயன்றார். அவரது கையில் பட்டு கீழே விழுந்த பந்தை லிங்டாஹ் உதைக்க முயன்றார். ஆனால், அவரது ஷாட் நழுவியது. இந்த நேரத்தில் அருகில் இருந்த உசி அபாரமாக கோல் வலைக்குள் பந்தை உதைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கூடுதலாக கோல்கள் எதுவும் விழவில்லை.

    முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி, வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 6 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்திலும், 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணே அணி, 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளது.

     

    இன்றைய ஆட்டம்

    மும்பை சிட்டி எஃப்சி

    - எஃப்சி கோவா

    நேரம் : இரவு 7 மணி

    இடம்: மும்பை

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai