Enable Javscript for better performance
ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்?இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று இறுதி மோதல்- Dinamani

சுடச்சுட

  

  ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்?இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று இறுதி மோதல்

  By மும்பை  |   Published on : 25th October 2015 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசிப் போட்டி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

  இதில் டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  இரு அணியினர் தீவிரம்: கடந்த 1991-92, 1999-2000, 2009-10 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி, ஒரு முறை கூட தொடரைக் கைப்பற்றவில்லை. இந்த முறை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்துவிடக் கூடாது என்பதில் இந்திய வீரர்களும் கவனமாக உள்ளனர். இதனால், இப்போட்டி அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த 22 ஆம் தேதி சென்னையில் நடந்த 4-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய துணை கேப்டன் விராட் கோலி அதிரடியாக சதம் விளாசியது அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது.

  கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருப்பது இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கேப்டன் மகேந்திர சிங் தோனி, இதுவரை முடிந்துள்ள 4 போட்டிகளில் 185 ரன்கள் (சராசரி 61.66) எடுத்துள்ளார்.

  இத்தொடரில் 2 முறை டக்அவுட்டான சுரேஷ் ரெய்னாவும் சென்னையில் நடந்த ஆட்டத்தின்போது அரை சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஓரளவுக்கு சிறப்பான நிலையில் உள்ளது.

  ஜொலிக்காத பேட்ஸ்மேன்கள்: ஷிகர் தவண் மட்டுமே தனது அதிரடியை தொடங்காமல் இருக்கிறார். இந்த ஆட்டத்தில் அவர், நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவைப் பொருத்த வரை தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா போதிய அளவில் ரன் குவிக்கவில்லை. அவர் கடைசி 4 போட்டிகளில் மொத்தம் 52 ரன்களே எடுத்துள்ளார்.

  இதேபோல டேவிட் மில்லரும் விரைவில் ஆட்டமிழப்பது தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கிற்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இவர்கள் இருவர் உள்பட மற்ற வீரர்களும் கடந்த ஆட்டத்தில் விரைவில் விக்கெட்டை இழந்து அணியை தடுமாறவைத்தனர்.

  இந்த சூழலில் கேப்டன் டி வில்லியர்ஸ் தனி ஆளாக போராடி சதம் விளாசினார். இதனால், தென் ஆப்பிரிக்கா கௌரவமான ஸ்கோரை எட்டியது. இதுவரையிலான ஆட்டங்களில் டி வில்லியர்ஸ் மொத்தம் 239 ரன்கள் குவித்துள்ளார். டி வில்லியர்ûஸ பார்த்து தென் ஆப்பிரிக்காவின் இதர பேட்ஸ்மேன்களும் பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அந்த அணியில் ஆல்ரவுண்டர் ஜே.பி.டுமினி, வேகப் பந்துவீச்சாளர் மோர்ன் மோர்கெல் ஆகியோர் காயமடைந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்திலும் மோர்கெல் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

  மோர்கெல், டுமினிக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட கிறிஸ் மோரீஸ், ஆரோன் பங்கிசோ ஆகியோர் முந்தைய வீரர்களின் இடத்தை நிரப்பத் தவறிவிட்டனர்.

  ஸ்ரீநாத்துக்கு வாய்ப்பு? இம்ரான் தாஹிர் பந்துவீச்சு இத்தொடரில் இன்னும் எடுபடவில்லை. எதிர்பார்த்த அளவில் விக்கெட்டுகள் வீழ்த்தாத நிலையில் எதிரணியினர் அவரது பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்துவிடுகின்றனர்.

  இருப்பினும் ககிசோ ரபடா, டேல் ஸ்டெயின் போன்றார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்திய அணியைப் பொருத்த வரை ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல் போன்ற சுழல் கூட்டணி ஓரளவுக்கு எதிரணியினரை கட்டுப்படுத்துகின்றனர். மோஹித்

  சர்மாவைவிட புவனேஷ்வர் சற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடைசி 2 ஒரு நாள் போட்டிகளுக்கு சேர்க்கப்பட்ட ஸ்ரீநாத் அரவிந்துக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai