சுடச்சுட

    

    ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு

    By dn  |   Published on : 25th October 2015 02:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hasim-amla

    இந்திய - தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

     இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

    இந்நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.

     இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தொடரை வெல்வர் என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai