சுடச்சுட

  

  மதுரையில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி:250 வீரர்கள் பங்கேற்பு

  By மதுரை  |   Published on : 25th October 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mdubox

  மதுரையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

  குத்துச் சண்டை வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும் பிரதமர் கோப்பைக்கான 3 நாள் குத்துச்சண்டை போட்டி மதுரையில் வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் 20 மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

  இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை கூட்டமைப்பு வகுத்துள்ள விதிகளின் படி இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 10 எடை பிரிவுகளில், 17 முதல் 34 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஐந்து நடுவர்களின் முடிவுகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்.

  கணினிகள் மூலம் புள்ளிகள் கணக்கிடப்படுவதால் போட்டியில் குழப்பங்களுக்கு வாய்ப்பில்லை. ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெற உள்ள அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்காக சர்வதேச தரத்திலான குத்துச் சண்டை மேடையை அமைத்துள்ளோம் என்றார்.

  புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் வீரர்களின் கிளப்புகளுக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வழங்கப்படும். போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் இடத்துக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் இடத்துக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai