சுடச்சுட

  

  மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

  இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வாரிய மேலாளர் ரோலன்ட் ஹோல்டர் கூறியதாவது:

  மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஆகிய 3 நாடுகளிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மேற்கிந்தியத் தீவில் நடைபெறுகிறது.

  மூன்று வாரங்கள் நடைபெறும் இத் தொடரில் மொத்தம் 10 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. உலகின் இரண்டு முன்னணி நாடுகள் இங்கு வந்து விளையாடுவது எங்களுக்கு பொன்னான வாய்ப்பாகும்.

  ஏனெனில், எங்கள் அணியின் திறமையை பரிசோதித்துக் கொள்ள இது உதவும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai