சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    அதைத் தொடர்ந்து 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை 200 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்களும் எடுத்தன.

    அதைத் தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸத் தொடங்கிய இலங்கை, கடந்த 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில், 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. சனிக்கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூஸ் 46 ரன்களும், மிலிண்டா ஸ்ரீவர்த்தனா 42 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து 244 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்தது.

    மாலையில் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியதால் 3ஆம் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. 9 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. சாய் ஹோப் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார். 2 நாள்கள் எஞ்சியிருக்கும் நிலையில் 9 விக்கெட் கைவசம் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai