சுடச்சுட

  

  ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கௌதம் கம்பீரும், மனோஜ் திவாரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  தில்லி - மேற்குவங்க கிரிக்கெட் அணிகளிடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 3ஆம் நாளான சனிக்கிழமை மேற்கு வங்க அணி 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. மனன் சர்மா வீசிய 8-ஆவது ஓவரில் பார்த்தசாரதி பட்டாச்சார்யா ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 4-ஆவது வீரராக மேற்கு வங்க கேப்டன் மனோஜ் திவாரி பேட்டிங் செய்ய வந்தார்.

  அப்போது அவர் தலையில் தொப்பி அணிந்திருந்தார். இந்நிலையில் திடீரென ஹெல்மெட் கொண்டு வரும்படி ஓய்வறையில் இருப்பவர்களிடம் சைகை காட்டினார். அப்போது முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த எதிரணி கேப்டன் கௌதம் கம்பீர் நேரத்தை கடத்துவதற்காகதான் மனோஜ் திவாரி இவ்வாறு செய்கிறார் என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  வாக்குவாதம் முற்ற, இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதால் நடுவர் ஸ்ரீநாத், குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். அப்போது நடுவர் மீது கம்பீர் கைவத்து தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர், ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் கம்பீர், திவாரி இருவருக்கும் போட்டி நடுவர் சம்மன் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai