சுடச்சுட

    

    ஹாக்கி வீரர் குர்பஜ் சிங் மீதான தடை நீக்கம்

    By புது தில்லி,  |   Published on : 25th October 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gurbaj2

    இந்திய ஹாக்கி அணியில் சக வீரர்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றதாக கூறி குர்பஜ் சிங் மீது விதிக்கப்பட்ட தடையை ஹாக்கி இந்திய அமைப்பு நீக்கியுள்ளது.

    பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் கடந்த ஜூன் மாதம் நடந்த உலக ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் நடுக்கள வீரர் குர்பஜ் சிங் (27), சக அணியினரிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாகவும், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து முன்னாள் பயிற்சியாளர் ஜுடி பிலிக்ஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஹாக்கி இந்தியா அமைப்பிடம் சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் ஹாக்கி இந்தியா அமைப்பு, குர்பஜ்சிங்குக்கு 9 மாதம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்தது.

    இதனை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் குர்பஜ் சிங் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின், குர்பஜ் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்தார்.

    நீதிமன்ற உத்தரவின் நகலை பெற்ற, ஹாக்கி இந்தியா அமைப்பின் வீரர்கள் குறைதீர்க்கும் குழு அங்கத்தினர்கள், குர்பஜ் சிங் மீதான தடையை உடனடியாக நீக்குவதாக சனிக்கிழமை அறிவித்தனர். இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடபடக் கூடாது என்று குர்பஜ் சிங்குக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai