சுடச்சுட

  

  9, 000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர்:டெஸ்ட் கிரிக்கெட்டில் யூனிஸ்கான் புதிய சாதனை

  By துபை  |   Published on : 25th October 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  unis

  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9,000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை யூனிஸ்கான் நிகழ்த்தியுள்ளார்.

  இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-ஆவது டெஸ்ட் போட்டி துபையில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

  இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்களும், இங்கிலாந்து 242 ரன்களும் எடுத்தன. சனிக்கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் (1 ரன்), சோயிப் மாலிக் (7) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் முகமது ஹஃபீஸ் 51 ரன்களுடன் வெளியேறினார்.

  இதன் பின்னர் ஜோடி சேர்ந்த யூனிஸ் கானும், கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் விக்கெட் சரிவை தடுத்து ஆடினர். இந்த ஆட்டத்தில் 47 ரன்கள் எடுத்தபோது யூனிஸ்கான் டெஸ்ட் அரங்கில் 9,000 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை யூனிஸ்கான் பெற்றார். சர்வதேச அளவில் 14-ஆவது வீரராக உள்ளார்.

  தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் யூனிஸ்கான், மிஸ்பா இருவரும் அரை சதம் விளாசினர். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. யூனிஸ்கான் 71 ரன்னுடனும் (134 பந்து, 7 பவுண்டரி), மிஸ்பா 87 ரன்களுடனும் (137 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்ஸர்) களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் இங்கிலாந்தைவிட 358 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ள பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai