சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றிப் பாதையில் பாகிஸ்தான்

    By  துபை,  |   Published on : 26th October 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
     இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபி தாபியில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-ஆவது டெஸ்ட் போட்டி துபையில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்களும், இங்கிலாந்து 242 ரன்களும் எடுத்தன.
     தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான், 2-ஆவது இன்னிங்ஸில் 95 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
     அந்த அணியில் அதிகபட்சமாக யூனிஸ்கான் 118 ரன்கள் (211 பந்து, 13 பவுண்டரி) விளாசினார்.
     இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 491 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மோயீன் அலி (ஒரு ரன்), கேப்டன் குக் (10 ரன்கள்), இயான் பெல் (46 ரன்கள்) போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் அந்த அணி, 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 59 ரன்களுடனும், பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் 7 விக்கெட் கைவசம் உள்ள இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 361 ரன்கள் தேவைப்படுகிறது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai