Enable Javscript for better performance
இந்தியாவில் தெற்காசியப் போட்டிகள்: அடுத்த ஆண்டு நடைபெறுகிறது- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவில் தெற்காசியப் போட்டிகள்: அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

    Published on : 26th October 2015 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டு நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
     தெற்காசிய போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
     வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி உள்பட மொத்தம் 25 போட்டிகள் நடைபெற உள்ளன.
     இதில் டென்னிஸ் போட்டியும் இந்த ஆண்டு முதல் சேர்க்கப்பட உள்ளது.
     போட்டியை நடத்தும் இந்தியா உள்பட, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளிலிருந்து மொத்தம் 4,000 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
     இப்போட்டி குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "25 போட்டிகளில் 17 போட்டிகள் குவாஹாட்டியிலும் மீதம் உள்ள 8 போட்டிகள் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிலும் நடைபெற உள்ளன' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai