சுடச்சுட

  
  gambhir

  இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது சமூகம் குறித்து தில்லி கேப்டன் கௌதம் கம்பீரும், அவரது அணியினரும் அவதூறாக பேசினர் என்று மேற்குவங்க கேப்டன் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியதற்கு கம்பீர் பதில் அளித்துள்ளார்.

  மேற்கு வங்கம் - தில்லி அணிகளிடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தில்லியில் நடைபெற்றது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. முன்னதாக 3ஆம் நாளான கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் போது தில்லி கேப்டன் கௌதம் கம்பீருக்கும், மேற்குவங்க கேப்டன் மனோஜ் திவாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்னையில் கம்பீருக்கு 70 சதவீதமும், திவாரிக்கு 40 சதவீதமும் ஆட்டக் கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

  இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது சமூகத்தை குறித்து கம்பீர் மற்றும் சிலர் இனவெறியோடு கருத்துகளை தெரிவித்ததாக திவாரி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியது:

  ‘கம்பீர் என்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து சௌரவ் கங்குலியிடம் நான் பேசினேன். அப்போது மொத்த பிரச்னை குறித்தும் விவரித்தேன். கம்பீரும் அவரது அணியினரும் கங்குலி குறித்தும், எங்களது சமூகத்தை குறித்தும் அவதூறு கருத்துகளை வெளியிட்டதை அறிந்து கங்குலி மிகவும் வருந்தினார். எனக்கும் இது கவலையளிக்கிறது. வார்த்தை மோதல்கள், போட்டி மனப்பான்மை ஆகியவை இருக்க வேண்டியதுதான். ஆனால், அவற்றிற்கு எல்லை உண்டு என்றார் திவாரி. போட்டியின் போது கம்பீரும், திவாரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பதிவு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) அனுப்பப்பட்டுள்ளது. அதனை பிசிசிஐ ஆய்வு செய்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

  தன் மீது இனவெறி புகார் எழுப்பப்பட்டுள்ளது குறித்து கெளதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ஞாயிறு அன்று வங்காள இனத்தைப் பற்றியும் கங்குலி பற்றியும் நான் அவதூறு செய்ததாக வாரி தரம் தாழ்ந்து கூறியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படை ஆதாரம் அற்றவை. தனது கற்பனையின் மூலம் பரபரப்பு செய்ய திவாரி முயல்கிறார். நான் மிகவும் பெருமைமிக்க இந்தியன். எல்லா மதம், இனங்களையும் மதிப்பவன். ஐபிஎல்-லில் கொல்கத்தா அணிக்குத் தலைமையேற்றது முதல் வங்காள இனத்தினர் என் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள். பலபேட்டிகளில் வங்காளம் தான் என்னுடைய இரண்டாவது வீடு என்று சொல்லியுள்ளேன்.

  கங்குலி இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். அவருடைய தலைமையில்தான் நான் இந்திய அணியில் அறிமுகம் ஆனேன். அவருடைய தலைமைப் பண்பில் இருந்து நிறைய கற்றுக்கொண்டு கொல்கத்தா ஐபிஎல் அணிக்குத் தலைமையேற்கும்போது அதைப் பயன்படுத்தி வருகிறேன். கீழ்த்தரமான விளம்பரம் தேடுவதற்காக கங்குலியின் பெயரை திவாரி பயன்படுத்தியுள்ளார்.

  எனக்கு அதிக அபாரதம் விதிக்கப்பட்டதற்குக் காரணம், அடுத்தடுத்த போட்டிகளில் நான் குற்றம்சாட்டப்பட்டுள்ளேன். அதனால் இப்போது நடந்த பிரச்னையால் மட்டுமே எனக்கு அதிக அபராதம் விதிக்கப்படவில்லை.

  இப்போது என் மீது இனவெறிப் புகார் கூறும் திவாரி இதை ஏன் முன்பே சொல்லவில்லை? அவருக்கு வாழ்க்கையில் நல்ல மனநிலை ஏற்படவேண்டும் என விரும்புகிறேன். அவருடைய சீனியராக நான் சொல்லும் அறிவுரை: திவாரி, விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதை விட்டுவிட்டு பரபரப்பான புகார்களைக் கூறிக்கொண்டிருக்கக் கூடாது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai