சுடச்சுட

    

    இலங்கை - மே.இ.தீவுகள் இடையிலான டெஸ்ட்: மழையால் 4ஆம் நாள் ஆட்டம் ரத்து

    By கொழும்பு,  |   Published on : 26th October 2015 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை - மேற்கிந்தியத் தீவுகளிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
     இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 2-ஆவது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை 200 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி, 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து எதிரணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த அணி, 3ஆம் நாளான கடந்த சனிக்கிழமை 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் அன்றைய ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் 4 ஆம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai