சுடச்சுட

  

  இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது சமூகம் குறித்து தில்லி கேப்டன் கௌம் கம்பீரும், அவரது அணியினரும் அவதூறாக பேசினர் என்று மேற்குவங்க கேப்டன் மனோஜ் திவாரி குற்றம் சாட்டினார்.
   மேற்கு வங்கம் - தில்லி அணிகளிடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தில்லியில் நடைபெற்றது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. முன்னதாக 3ஆம் நாளான கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் போது தில்லி கேப்டன் கௌதம் கம்பீருக்கும், மேற்குவங்க கேப்டன் மனோஜ் திவாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்னையில் கம்பீருக்கு 70 சதவீதமும், திவாரிக்கு 40 சதவீதமும் ஆட்டக் கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
   இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது சமூகத்தை குறித்து கம்பீர் மற்றும் சிலர் இனவெறியோடு கருத்துகளை தெரிவித்ததாக திவாரி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.
   இது தொடர்பாக அவர் கூறியது:
   கம்பீர் என்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து சௌரவ் கங்குலியிடம் நான் பேசினேன். அப்போது மொத்த பிரச்னை குறித்தும் விவரித்தேன். கம்பீரும் அவரது அணியினரும் கங்குலி குறித்தும், எங்களது சமூகத்தை குறித்தும் அவதூறு கருத்துகளை வெளியிட்டதை அறிந்து கங்குலி மிகவும் வருந்தினார். எனக்கும் இது கவலையளிக்கிறது. வார்த்தை மோதல்கள், போட்டி மனப்பான்மை ஆகியவை இருக்க வேண்டியதுதான். ஆனால், அவற்றிற்கு எல்லை உண்டு என்றார் திவாரி. போட்டியின் போது கம்பீரும், திவாரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பதிவு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) அனுப்பப்பட்டுள்ளது. அதனை பிசிசிஐ ஆய்வு செய்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai