சுடச்சுட

  

  நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் அபிஜீத் குப்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
   நெதர்லாந்து நாட்டின் ஹியூகேவீன் நகரில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இதன் 9-ஆவது மற்றும் இறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அபிஜீத் குப்தா, சகநாட்டு வீரரான நீலாட்பால் தாûஸ எதிர்கொண்டார்.
   இதில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய அபிஜீத் குப்தா, 20-ஆவது நகர்த்தலின்போது ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். 9 சுற்றுகளின் முடிவில் அவர் மொத்தம் 7 புள்ளிகளை பெற்று சாம்பியனானார்.
   அவரைத் தொடர்ந்து நெதர்லாந்தின் ஜான் வெர்லி, பென்ஜமின் போக் ஆகியோர் 6.5 புள்ளிகள் பெற்றனர். நீலாட்பால் தாஸ் 6 புள்ளிகள் பெற்றார். வெற்றிக்குப் பின்னர் அபிஜீத் குப்தா கூறுகையில், "இந்தத் தொடரில் நெதர்லாந்தின் ஜான் வெர்லிக்கு எதிரான ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில் என்னைவிட அவர் அரை புள்ளி முன்னிலையில் இருந்தார். இருப்பினும் அடுத்தடுத்து வெற்றிகள் பெற்று அவரைவிட முன்னிலைப் பெற்றேன்' என்றார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai