சுடச்சுட

  

  இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

  By  துபை,  |   Published on : 27th October 2015 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  22

  இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
   இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது.
   491 ரன்கள் இலக்கு: இந்நிலையில் 2-ஆவது போட்டி துபையில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்களும், இங்கிலாந்து 242 ரன்களும் எடுத்தன. 2-ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 95 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
   இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 491 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 4-ஆம் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 59 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி நாளான திங்கள் கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜோ ரூட் கூடுதலாக 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
   பாகிஸ்தான் வெற்றி: பேர்ஸ்டோ 22 ரன்கள் எடுத்திருந்தபோது யாசிர் ஷா பந்துவீச்சில் போல்டானார். இதன் பின்னர் வந்தவர்களில் ஆதில் ரஷீத் மட்டும் சிறப்பாக விளையாடி 61 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 137.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளும், ஜுல்ஃபிகர் பாபர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
   இதன் மூலம் 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. மேலும், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ஷார்ஜாவில் வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai