சுடச்சுட

  

  இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது: சுனில் காவஸ்கர்

  By  புது தில்லி,  |   Published on : 27th October 2015 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  21

  தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு மிகவும் கவலையளிப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் தெரிவித்தார்.
   இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று
   டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி-20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை
   3-2 என்ற கணக்கிலும் அந்த அணி கைப்பற்றியுள்ளது.
   மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் குவின்டன் டி காக், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி தலா ஒரு சதம் அடித்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
   இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை. குறிப்பாக புவனேஷ்வர் குமார் 10 ஓவர்களில் 106 ரன்கள் வழங்கி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். மோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா ஆகியோரும் 70 ரன்களுக்கு மேல் வாரி இறைத்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
   பந்துவீச்சு கவலையளிக்கிறது: மகேந்திர சிங் தோனி பந்துவீச்சாளர்களை கையாண்ட விதத்தில் நெகிழ்வுத்தன்மை இல்லை. நிறைய மாறுபாடுகளை செய்ய அவருக்கு வாய்ப்பில்லை. தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் கவலையளிக்கிறது. டி-20, ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் அவர்கள் சாதாரணமாக பந்துவீசியதை நாம் பார்த்தோம். வேகப்பந்துவீச்சாளர்கள் 135 கி.மீ. வேகத்தில் "ஷார்ட்பிட்ச்' பந்துகளை தொடர்ந்து வீசுகின்றனர். இந்த வேகத்தை கொண்டு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்க முடியாது. 145 கி.மீ. வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீச முற்படவேண்டும் என்றார் அவர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai