Enable Javscript for better performance
உலகக் கோப்பை வில்வித்தை: வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி- Dinamani

சுடச்சுட

    

    உலகக் கோப்பை வில்வித்தை: வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி

    Published on : 27th October 2015 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    23

    உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
     உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டி மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி (21), தென் கொரியாவின் சோய் மிசுன்னை எதிர்கொண்டார்.
     முதலில் இருவரும் சரிசமமாக ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், கடைசி நேரத்தில் 19 வயதான சோய் மிசுன், தீபிகா குமாரியைவிட 2 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வெல்வது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் இஸ்தான்புல் (2011 ஆம் ஆண்டு), டோக்கியோ (2012), பாரீஸ் (2013) ஆகிய போட்டிகளில் ஏற்கெனவே அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, துருக்கியின் டீமிர் எல்மாக்ஸ்லியிடம் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் உலகக் கோப்பை காம்பவுண்ட் பிரிவில் அவர் இந்தியாவுக்கு முதல் முறையாக வென்றுத் தந்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai