சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி: இந்திய அணியின் தரவரிசையில் மாற்றமில்லை

    By  துபை,  |   Published on : 27th October 2015 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், அது தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
     இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றினாலும் அது தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்திய அணியின் தரவரிசை உயர்வுக்கான 2 புள்ளிகளை மட்டும் குறைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தரவரிசைப்படி 127 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவும் (114), தென் ஆப்பிரிக்காவும் (112) தங்களது 2, 3-ஆவது இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன.
     பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய துணை கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹஷிம் ஆம்லா 5-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 2 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தில் உள்ளார். ஃபாப் டுபிளெஸ்ஸிஸ் 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai