சுடச்சுட

    

    மாநில வலுதூக்கும் போட்டி: வேலூர், சேலம் அணிகள் சாம்பியன்

    By  மன்னார்குடி,  |   Published on : 27th October 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    24

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் வலுதூக்கும் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் வேலூர், சேலம் அணிகள் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றன.
     திருவாரூர் மாவட்ட வலு தூக்கும் சங்கம், மன்னார்குடி எம்ஆர்டி வலு தூக்கும் நிலையம் ஆகியன இணைந்து, மன்னார்குடி அரசுக் கல்லூரியில், தமிழ்நாடு மாநில அளவிலான இளையோர் வலுதூக்கும் போட்டிகளை நடத்தின.
     ஆண்கள்,பெண்கள் என இரு பிரிவுகளில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தன. ஆண்களுக்கு 56, 62, 69, 77, 85, 94, 105 கிலோ, அதற்குமேல்
     என 8 பிரிவுகளிலும், பெண்கள் எடை பிரிவில் 48, 53, 58, 63, 69, 75 கிலோ, அதற்கு மேல் என 7 பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில், விழுப்புரம் என். சதாம்உசேன் (56 கிலோ), திருவள்ளூர் ஆர்.சாலமன் (62 கிலோ), திருவள்ளூர் எம்.ராஜன் (69 கிலோ), வேலூர் எம்.தீபன் (77 கிலோ), வேலூர் பி.கோகுல் (85 கிலோ), தூத்துக்குடி சிவராம் (94 கிலோ), வேலூர் எஸ்.பிரதீப்குமார் (105 கிலோ), 105 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் சென்னை பிச்சையா விக்னேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். பெண்கள் பிரிவில் 48, 53, 58, 63, 69, 75 ஆகிய ஐந்து பிரிவுகளில் முறையே சேலத்தை சேர்ந்த ஜி.ராணி, ஆர்.ரம்யா, கே.பாரதி, எம்.பிரியா, ஆர்.சந்திரா, பி.விஜயலெட்சுமி ஆகியோரும், 75 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் வேலூர் டி.அகல்யாவும் முதலிடம் பெற்றனர். முதலிடம் பெற்ற 15 பேரும் தமிழ்நாடு மாநில அணியின் சார்பில் அகில இந்திய போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
     சிறந்த வீரராக திருவள்ளூர் ஆர்.சாலமனும், வீராங்கனையாக சேலம் எம்.பிரியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இளையோர் குழு சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் வேலூர் அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை, உணவு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai