சுடச்சுட

    

    மும்பை ஆடுகள விவகாரம்: ரவி சாஸ்திரிக்கு கிரிக்கெட் உலகம் கண்டனம்!

    By DN  |   Published on : 27th October 2015 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வான்கடே மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் சுதிரைக் கண்டித்த ரவி சாஸ்திரிக்கு கிரிக்கெட் உலகம் கண்டம் தெரிவித்துள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் குவின்டன் டி காக், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி தலா ஒரு சதம் அடித்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி-20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கிலும் அந்த அணி கைப்பற்றியுள்ளது.

    சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியின்போது ஆடுகளம் ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், மும்பை வான்கடே ஆடுகளம், பேட்டிங் விக்கெட்டாக இருந்தது இந்திய அணிக்குப் பின்னடைவாகப் போனது. போட்டி முடிவடைந்தபிறகு இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியும் பவுலிங் பயிற்சியாளர் பி. அருணும், வான்கடே மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் சுதிர் நாயக்கிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. பேட்டிங் பிட்சை வடிவமைத்து தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துவிட்டீர்கள் என்று ரவி சாஸ்திரி சுதிரைக் கண்டித்து, தகாத வார்த்தைகளால் கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரவி சாஸ்திரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதையடுத்து சுதிர், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இத்தகவலை மும்பை கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது.

    ரவி சாஸ்திரியின் செயலுக்கு கிரிக்கெட் உலகில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    இந்திய முன்னாள் வீரர் வினோத் காம்பிளி இதுபற்றி கூறும்போது: ரவி சாஸ்திரி, ஏன் ஆடுகளத்தையும் மிகவும் மரியாதைக்குரிய ஆடுகள வடிவமைப்பாளரையும் குறை சொல்கிறீர்கள்? சரியாக ஆடாத இந்திய அணியைக் குறை சொல்லவும். நம்பிக்கை இழந்த நிலை என்றுதான் இதைச் சொல்லமுடியும் என்றார்.

    மற்றொரு முன்னாள் கிரிக்கெட் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும்போது, சாஸ்திரி, சுதிரை விமரிசனம் செய்ததில் எல்லை மீறியுள்ளார். வயதுக்கும் சக டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கும் அவர் மரியாதை அளிக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

    கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஆடுகளம் பற்றி எவ்வளவு அதிகமாகக் குறை சொல்கிறோமோ அந்தளவுக்கு நம்மால் எந்த ஆடுகளத்திலும் விளையாடமுடியாது என்று அர்த்தமாகும். உள்ளூர் அணிக்குச் சாதகமாக உள்ள ஆடுகளங்களைப் பற்றி எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அது ஒரு அணிக்கு மட்டும் சார்பாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai