Enable Javscript for better performance
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கோப்பையை வென்றது இலங்கை அணி- Dinamani

சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கோப்பையை வென்றது இலங்கை அணி

    By கொழும்பு,  |   Published on : 27th October 2015 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணி கோப்பையை வென்றது.
     இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. காலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
     அதைத் தொடர்ந்து 2-ஆவது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை 200 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் 163 ரன்களும் எடுத்தன.
     இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3ஆம் நாளான கடந்த சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் அந்த அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால் அன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 5ஆம் நாளான திங்கள்கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியின் ரங்கணா ஹெராத், மிலிண்டா ஸ்ரீவர்த்தனா ஆகியோரின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் 65.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக டேரன் பிராவோ 61 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் ஹெராத் 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீவர்த்தனா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
     இதையடுத்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி கோப்பையை வென்றது. ஸ்ரீவர்த்தனா ஆட்டநாயகனாகவும், ஹெராத் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விரு அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் வரும் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai