ஸ்பெயின் லீக் கால்பந்து: சௌரஸ் "ஹாட்ரிக்' கோல்
By மாட்ரிட், | Published on : 27th October 2015 01:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

எய்பர் அணிக்கு எதிரான ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் லூயிஸ் சௌரஸ் "ஹாட்ரிக்' கோல் அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்பெயின் லீக் கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா - எய்பர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில், நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி காயம் காரணமாக பார்சிலோனா அணியில் பங்கேற்கவில்லை. 10-ஆவது நிமிடத்திலேயே எய்பர் அணியின் போர்ஜா பாஸ்டன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். பார்சிலோனா தரப்பில் லூயிஸ் சௌரஸ் 21, 48, 85 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடித்து "ஹாட்ரிக்' வீரராக வலம் வந்தார். முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.