சுடச்சுட

    

    அமித் மிஸ்ரா, குற்றம் நிரூபணம் ஆகும் வரை விளையாடுவார்!: பிசிசிஐ தகவல்

    By DN  |   Published on : 28th October 2015 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mishra1

    பெங்களூரில் ஹோட்டல் அறையில் பெண் ஒருவரை தவறாகப் பேசி தாக்கியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    தென் ஆப்பிரிக்கா உடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணியில் அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ள நிலையில் அவர் முதல் டெஸ்டில் இடம்பெறுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஐபிஎல் தலைவரான ராஜீவ் சுக்லா கூறும்போது:

    அமித் மிஸ்ரா மீதான புகாரை பிசிசிஐ கருத்தில் கொண்டுள்ளது. இந்த வழக்கின் தகவல்களை சேகரித்து வருகிறோம். வழக்கு தொடர்பான சரியான தகவல்கள் கிடைத்த பிறகு, வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அமித் மிஸ்ரா மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai