சுடச்சுட

  

  ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்ப்பதற்கு இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து அவர் கூறியதாவது:
   ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது நல்லதொரு யோசனை. டி20 போட்டிகள் அதற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில், கிரிக்கெட் குறித்து தெரியாத நபர்களுக்கும், கிரிக்கெட்டிற்கு நல்லதொரு அறிமுகம் தேவைப்படும் நபர்களுக்கும் அது ஏற்புடைய வகையில் இருக்கும்.
   3 மணி நேரத்தில் அந்த விளையாட்டு முடிவதால், அதற்குப் பிறகு நீங்கள் அடுத்த வேலையை பார்க்கச் செல்லலாம் என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
   ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் (ஐஒசி) அடுத்த மாதம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
   இதனிடையே, ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை காண விரும்புவதாகக் கூறி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai