சுடச்சுட

  
  24

  ஐஎஸ்எல் போட்டியின் 22ஆவது ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை வீழ்த்தியது எஃப்சி புணே சிட்டி அணி.
   முன்னதாக, புணே அணி சார்பில் உச்சேவும், கேரள அணி சார்பில் ரஃபியும் தலா இரு கோல்கள் அடித்தனர்.
   ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே ஒரு கோல் அடித்து தனது ஆதிக்கத்தை தொடங்கியது கேரள அணி. அந்த அணியின் கிரிஸ் டக்னல் கோல் போஸ்ட்டின் வலது பக்கத்திலிருந்து பந்தை அடிக்க, அதை அற்புதமாக தலையால் முட்டி கோலாக்கினார் சக வீரரான ரஃபி.
   இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு தனக்கான கோல் கணக்கைத் தொடங்க ஆவசமுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தது புணே அணி. அந்த அணிக்கான முதல் கோல் ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் கிடைத்தது.
   அணியின் நிக்கி ஷோரே கோல் கம்பத்தை நோக்கி பந்தை பாஸ் செய்ய, அதை தலையால் முட்டி கோலாக்கினார் உச்சே. புணே அணிக்கான அடுத்த வாய்ப்பும் உடனடியாகக் கிடைத்தது.
   அந்த பெருமையையும் தனதாக்கிக் கொண்டார் உச்சே. ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் இந்த முறையும் நிக்கி ஷோரே பந்தை பாஸ் செய்ய, அதை லாவகமாக கோலாக்கினார் உச்சே.
   இதனால், புணே அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து கேரள அணி தொடர்ந்து போராடி தனக்கான இரண்டாவது கோலை அடித்தது. அந்த அணியின் சக வீரர் கார்னரில் இருந்து அடித்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயன்றார் ரஃபி.
   எனினும், கோல் போஸ்ட்டில் பட்டு தவறும் நிலையில் சென்ற பந்து மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள்ளாகவே சென்று கோலாக மாறியது. இதனால், ஆட்டத்தின் இடைவேளையின்போது இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன.
   இடைவேளைக்குப் பிறகு, தனது அணியை முன்னிலை பெறச் செய்யும் முனைப்பில் இரு அணி வீரர்களுமே விளையாடினர். எனினும், புணே அணிக்கே அந்த வாய்ப்பை வசமாக்கினார் அதன் வீரர் சன்லி.
   ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் சக வீரர் அடித்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் சன்லி. இதையடுத்து கேரள அணிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது புணே அணி.
   இன்றைய ஆட்டம்
   மும்பை சிட்டி எஃப்சி-
   நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி.
   நேரம் : இரவு 7 மணி
   இடம்: நவி மும்பை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai