Enable Javscript for better performance
தெற்காசிய விளையாட்டு போட்டிகள்: வலைதளம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தெற்காசிய விளையாட்டு போட்டிகள்: வலைதளம் தொடக்கம்

    By  குவாஹாட்டி,  |   Published on : 28th October 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஸ்ஸாம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வலைதளம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
     இந்த வலைதளத்தை அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்து, மத்திய விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியதாவது:
     www.southasiangames2016.ஸ்ரீர்ம் என்ற வலைதளத்தில், தெற்காசியப் போட்டிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் கிடைக்கும்.
     விளையாட்டுகளை நடத்துவதற்காக ரூ.60 கோடி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.24 கோடி, குழுக்களுக்காக ரூ.11 கோடி என மொத்தம் ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
     அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை குவாஹாட்டி, ஷில்லாங் ஆகிய நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறும். அவற்றில் 16 போட்டிகள் குவாஹாட்டி நகரிலும், 8 போட்டிகள் ஷில்லாங் நகரிலும் நடைபெற உள்ளன.
     இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன என்று சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
     இந்தப் போட்டிகளில், 4 ஆயிரத்தும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai