சுடச்சுட

    

    தேசிய நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

    By  ராஜ்கோட்,  |   Published on : 28th October 2015 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூத்தோருக்கான (சீனியர்) 69ஆவது தேசிய நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதன்கிழமை தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
     இதுகுறித்து ராஜ்கோட் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், "நாடு முழுவதிலும் இருந்து 700 மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். இது ராஜ்கோட்டில் நடைபெறுவது இதுவே முதல் முறை. இதுபோன்ற போட்டி முன்பு 1986ஆம் ஆண்டு ஆமதாபாதில் நடைபெற்றது' என்றார்.
     இந்திய நீச்சல் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), குஜராத் மாநில நீர் விளையாட்டு சங்கம் ஆகியவை, ராஜ்கோட் மாவட்ட நீச்சல் சங்கம் மற்றும் ராஜ்கோட் மாநகராட்சியுடன் இணைந்து இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
     கோத்தாரியா சாலையில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் நீச்சல் குளத்தில் நடைபெறும் இதன் தொடக்க நிகழ்ச்சியில் கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், இந்திய ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் விரேந்திர நானாவதி, இந்திய நீச்சல் கூட்டமைப்பு செயலர் கமலேஷ் நானாவதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai