சுடச்சுட

    
    23

    புணேயில் நடைபெற்று வரும் கேபிஐடி-எம்எஸ்எல்டிஏ புணே சாலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
     போட்டித் தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருக்கும் சோம்தேவ், பிரான்ûஸச் சேர்ந்த மேக்ஸிம் ஜான்வியருடன் முதல் சுற்றில் மோதினார்.
     இருவருக்கும் இடையேயான ஆட்டம் 1 மணி நேரம் 43 நிமிடம் நீடித்தது. முடிவில் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மேக்ஸிமை வீழ்த்தினார் சோம்தேவ். இவர் தனது இரண்டாவது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த என்.விஜய் சுந்தர் பிரசாந்தை எதிர்கொள்கிறார்.
     இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் அல்லெஸான்ட்ரோ பெகாவை சந்தித்த இந்தியாவின் சனம் சிங், 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இவர், ரஷியாவின் அலெக்ஸாண்டர் குத்ரியாத்செவை தனது 2ஆவது சுற்றில் சந்திக்கிறார்.
     மைனேனி, முருகேசன் தோல்வி: இந்நிலையில், போட்டித் தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் சாகேத் மைனேனி, பெலாரûஸச் சேர்ந்த இலயா இவாஷ்காவிடம் 7-5, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
     அதேபோல், போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் வார்டிடம், இந்தியாவின் ரஞ்சித் விராலி முருகேசன் 2-6, 6-4, 0-6 என்ற செட் கணக்கில் தோற்றார்.
     போபண்ணா ஜோடி தோல்வி: இதனிடையே, ஸ்விஸ் இன்டோர்ஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் ஃப்ளோரின் மெர்ஜியா இணை, ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் பெயா-பிரேஸிலின் புருனே செüரஸிடம் 6-4, 1-6, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai