சுடச்சுட

  
  19

  இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி திட்டியதாகக் கூறி வான்கடே மைதான பொறுப்பாளர் சுதிர் நாயக் அளித்த புகாரை வரும் 30ஆம் தேதி மும்பை கிரிக்கெட் சங்கம் விசாரிக்க உள்ளது.
   இதுகுறித்து, சங்கத்தின் இணைச் செயலாளர் பி.வி.ஷெட்டி கூறுகையில், "வான்கடே மைதான பொறுப்பாளர் சுதிர் நாயக்கிடம் இருந்து புகார் பெற்றுள்ளோம். இந்த விவகாரத்தை மேலாண்மைக் கமிட்டி வரும் 30ஆம் தேதி விசாரிக்கும்' என்றார்.
   மற்றொரு இணைச் செயலர் உன்மேஷ் கன்வில்கர் கூறுகையில், "ரவி சாஸ்திரிக்கும் தனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ரவி சாஸ்திரி அப்போது தனக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் சுதிர் நாயக் தனது புகாரில் தெரிவித்துள்ளார்' என்றார்.
   முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுடனான 5ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மூவர் சதம் அடித்தனர். இதனால், பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக இல்லை என்று கூறி அதன் பொறுப்பாளரான சுதிர் நாயக்கிடம் ரவி சாஸ்திரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
   எனினும், தான் அவ்வாறு தவறாக ஏதும் கூறவில்லை என்று ரவி சாஸ்திரி தம் மீதான குற்றச்சாட்டை செவ்வாய்க்கிழமை மறுத்துள்ளார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai