சுடச்சுட

    

    ரியோவில் கலந்துகொள்வதே இறுதியான ஒலிம்பிக் போட்டி: தங்கம் வெல்லும் முனைப்பில் யோகேஷ்வர் தத்

    By  புது தில்லி,  |   Published on : 28th October 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22

    ரியோ டி ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியே தான் இறுதியாகக் கலந்துகொள்ள இருக்கும் ஒலிம்பிக் போட்டி என இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் கூறியுள்ளார்.
     "ரியோ ஒலிம்பிக் போட்டியே நான் கலந்துகொள்ளும் இறுதி ஒலிம்பிக். ஆகவே அதில் தங்கம் வென்று நிறைவு செய்வதே எனது குறிக்கோள். அதற்காக முழு அளவில் தயாராகி வருகிறேன்.
     ஆனால், இந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு நான் ஓய்வு பெறப்போவதில்லை. ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் விளையாட விரும்புகிறேன்.
     எனினும், ஒலிம்பிக்கைப் பொறுத்த வரையில் ரியோவே எனது இறுதி போட்டி. அடுத்த நான்கு மாதங்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை. புரோ மல்யுத்த லீக்கிற்குப் பிறகு பயிற்சிக்காக 2 மாதங்கள் வெளிநாட்டுக்குச் செல்கிறேன். அந்த 2 மாத பயிற்சிக்காக அமெரிக்கா அல்லது ரஷியா செல்வேன்.
     கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதியின்மை காரணமாக வெளியேறியது ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில், அந்தப் போட்டியின்போது, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நல்லதொரு வாய்ப்பை தவறவிட்டேன்' என்று யோகேஷ்வர் தத் கூறினார்.
     கடந்த 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai