சுடச்சுட

  

  ஃபிஃபா தலைவர் பதவி: பிளாட்டினி உள்பட 7 பேர் போட்டி

  By  பாரீஸ்,  |   Published on : 29th October 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  24

  சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் பதவிக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) தலைவர் மைக்கேல் பிளாட்டினி உள்பட 7 பேர் போட்டியிடுவதாக ஃபிஃபா புதன்கிழமை அறிவித்தது.
   ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் 7 பேரின் விண்ணப்பங்களை ஃபிஃபா ஏற்றுக்கொண்டுள்ளது.
   அதன்படி ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசைன், முசா பிலிட்டி, ஜெரோம் சாம்பகேனி, ஜியானி இன்பான்டினோ, மைக்கேல் பிளாட்டினி, ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலிஃபா மற்றும் டோக்யோ செக்வேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
   டிரினிடாட் மற்றும் டொபாகோ முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் நாஹித், கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு பரிந்துரை செய்திருந்த 5 கால்பந்து சங்கத்தினர் ஏற்கெனவே வேறு ஒருவருக்கும் பரிந்துரை செய்திருந்ததால் டேவிட் நாஹித்தின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
   ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் மொத்தம் உள்ள 209 சங்கங்களில் இருந்து குறைந்தது 5 சங்கங்களின் உறுப்பினர் ஆதரவு தேவை. மேற்கண்ட 7 வேட்பாளர்களில் யுஇஎஃப்ஏ தலைவர் மைக்கேல் பிளாட்டினியும் உள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஃபிஃபா தலைவர் செப் பிளேட்டர், பிளாட்டினி ஆகிய இருவரும் 90 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
   "ஃபிஃபா தேர்தலுக்கு முன்பாக பிளாட்டினி மீதான தடை நீக்கப்பட வேண்டும் அல்லது அவரது தண்டனை காலம் முடிவடைய வேண்டும். பிளாட்டினி விஷயத்தில் ஃபிஃபா தேர்தல் குழு உரிய நேரத்தில் கூடி விவாதித்து சரியான முடிவெடுக்கும்' என்று ஃபிஃபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாட்டினியின் மீதான 90 நாள்கள் இடைக்காலத் தடை வரும் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai