Enable Javscript for better performance
அகில இந்திய கோ- கோ போட்டி: தமிழக அணி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய கோ- கோ போட்டி: தமிழக அணி அறிவிப்பு

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 29th October 2015 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்கும் அகில இந்திய கோ-கோ போட்டிக்கான தமிழக அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
     இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே.தமிழரசு வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்தின் சார்பாக 14 வயதுக்குள்பட்ட மாணவியருக்கான தமிழ்நாடு மாநில கோ-கோ அணி தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 56 மாணவியர் பங்கேற்றனர்.
     இதில், தமிழ்நாடு அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட 12 மாணவியரின் பெயர் விவரம்: கோகிலா (சேலம்), சந்தியா (தஞ்சாவூர்), பவித்ரா, ஓவியா (திருவண்ணாமலை), கவிபிரியா, சிவகாமி (கிருஷ்ணகிரி), சுவாதிஸ்ரீ, தானிஷாஸ்ரீ (மதுரை), கோபிகா (திருப்பூர்), ஜெயாஜெனிபர் (சிவகங்கை), தமிழ்ச்செல்வி (நெய்வேலி), பிருந்தா (நாகப்பட்டினம்).
     இவர்கள் வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நாங்டனில் நடைபெறும் அகில இந்திய கோ- கோ போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai