சுடச்சுட

    

    கோலாகலமாக நடைபெற்ற ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமணம்; சச்சின் நேரில் வாழ்த்து! (படங்கள்)

    By DN  |   Published on : 29th October 2015 03:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவும் இன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் இன்று திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக புதன்கிழமை மாலை ஜலந்தரில் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து மெஹந்தி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று நடைபெற்ற ஹர்பஜனின் திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து தில்லியில் வரும் 1-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    CSd9Q6ZWcAA5kv6.jpg 

    CSd9V4WWEAA8gYw.jpg

    3.jpg

    4.jpg

    sachin-anjali.jpg

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai