சுடச்சுட

    

    சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்: மும்பை அணி அபார வெற்றி

    By  மும்பை,  |   Published on : 29th October 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடிக்க, 5-1 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.
     ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் புதன்கிழமை நடைபெற்ற 23-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதின.
     சுனில் சேத்ரி ஹாட்ரிக்: இப்போட்டியின் 25-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்திய கேப்டனான சுனில் சேத்ரி, மும்பை அணிக்கு முதல் கோலை பெற்றுத் தந்தார். முன்னதாக சில வாய்ப்புகளை இரு அணியினரும் தவறவிட்டனர்.
     மும்பை வீரர்களின் முன்னிலை கொண்டாட்டம் 4 நிமிடங்களே நீடித்தது. 29-ஆவது நிமிடத்தில் "ஃப்ரீ கிக்' வாய்ப்பில், போய்தாங் ஹாகிப் கோல் அடித்து நார்த் ஈஸ்ட் அணிக்கு சமநிலை தேடித் தந்தார். இருப்பினும் முதல் பாதி முடிவதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக சுனில் சேத்ரி 2-ஆவது கோலை அடித்தார்.
     தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் மும்பை அணியின் சோனி நோர்டி, சுபாஷ் சிங், சுனில் சேத்ரி மூவரும் எதிரணியை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கினர்.
     48-ஆவது சுனில் சேத்ரிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கிடைத்தது. இதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அவர், கோல் அடித்து ஹாட்ரிக் வீரராக வலம் வந்தார்.
     இந்தத் தொடரில் பதிவு செய்யப்பட்ட 2-ஆவது ஹாட்ரிக் கோல் இதுவாகும். ஏற்கெனவே எஃப்சி கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் ஸ்டீவன் மெண்டோஜா ஹாட்ரிக் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
     மும்பை அணி வெற்றி: 51-ஆவது நிமிடத்தில் சோனி நோர்டியும், 87-ஆவது நிமிடத்தில் கேப்டன் பிரான்ட்ஸ் பெர்டினும் தங்கள் பங்குக்கு கோல் அடிக்க, மும்பை அணி வலுவான முன்னிலைப் பெற்றது.
     இதன் பின்னர் கூடுதலாக கோல் எதுவும் பதிவாகவில்லை. முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 6 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்விகளுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. எஃப்சி கோவா அணியும் 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல்கள் வித்தியாசத்தில் மும்பை அணி முன்னிலையில் உள்ளது.
     6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நார்த்ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணி 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 7-ஆவது இடத்தில் உள்ளது.
    இன்றைய ஆட்டம்
     அட்லெடிகோ டி கொல்கத்தா - தில்லி டைனமோஸ் எஃப்சி
     நேரம் : இரவு 7 மணி
     இடம்: மும்பை.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai