சுடச்சுட

  

  தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வி: கேரள அணியின் பயிற்சியாளர் விலகல்

  By  புது தில்லி,  |   Published on : 29th October 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  22

  இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் பயிற்சியாளர் பீட்டர் டெய்லர், தனது பதவியிலிருந்து புதன்கிழமை விலகினார்.
   கடந்த ஆண்டு இறுதிச் சுற்று வரை முன்னேறி 2ஆம் இடத்துடன் நிறைவு செய்த கேரள அணி, இந்த முறை அக்டோபர் 6ஆம் தேதி உள்ளூரில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி அணியை மட்டும் வீழ்த்தியது.
   மும்பைக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் டிரா செய்தது. அதன் பிறகு நடைபெற்ற கொல்கத்தா, தில்லி, கோவா, புணே அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
   இந்நிலையில், அணியின் மோசமான செயல்பாட்டுக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பீட்டர் டெய்லர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக கேரள பிளாஸ்டர்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பரஸ்பர முடிவின்படி கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பீட்டர் டெய்லர் உடனடியாக விலகியுள்ளார். அணியில் அவரது முயற்சிக்கும், பங்களிப்புக்கும் கேரள பிளாஸ்டர்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
   62 வயதான பீட்டர் டெய்லர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆவார். கேரள அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இவர் விலகியுள்ளதால், இவருக்குப் பதிலாக உதவிப் பயிற்சியாளர் டிரேவர் மோர்கன் பயிற்சியாளர் பொறுப்பை கவனித்துக் கொள்வார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கேரள பிளாஸ்டர்ஸ் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai