Enable Javscript for better performance
தோனியால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டேனா?: சேவாக் பதில்- Dinamani

சுடச்சுட

    

    தோனியால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டேனா?: சேவாக் பதில்

    By DN  |   Published on : 29th October 2015 05:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sehwag1

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன்களில் ஒருவர் வீரேந்திர சேவாக். தொடக்க ஆட்டக்காரரான அவர், தனது பேட்டிங் திறமையால் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பந்து வீச்சாளர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியவர். கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சேவாக், தனது 37-ஆவது பிறந்த தினமான கடந்த 20-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    தோனியால் அணியிலிருந்து நீக்கப்பட்டீர்களா என்கிற கேள்விக்கு சேவாக் அளித்த பதில்:

    எனக்கும் தோனிக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. இருவரும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவோம். தோனியின் தலைமையில் நான் ஆடி இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. தோனியுடன் எனக்குப் பிரச்னை ஏற்பட்டிருந்தால் நான் அணியிலிருந்து முன்பே நீக்கப்பட்டிருப்பேன். இந்திய அணியிலிருந்து நான் நீக்கப்பட்டதற்கு தோனி காரணம் என கங்குலி சொல்லியிருப்பது தவறு.

    தோனியால் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்க மாட்டேன். அவர் நல்ல இதயம் கொண்டவர். என்னைப் போன்ற மூத்த வீரர்கள் அவரை மதித்தோம். அவர் முதலில் கேப்டன் ஆனபோது எல்லா மூத்த வீரர்களும் அவருக்குத் தக்க ஆலோசனைகளை வழங்கினோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai