சுடச்சுட

    
    26

    பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சீனாவின் லீரென் டிங்கிற்கு எதிரான 2-ஆவது சுற்று ஆட்டத்தை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.
     ஸ்பெயினின் பில்பாவ் நகரில் பில்பாவ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
     மொத்தம் 6 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்றில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சீனாவின் லீரென் டிங்கை எதிர்கொண்டார்.
     இதில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய ஆனந்த், 35-ஆவது நகர்த்தலின்போது ஆட்டத்தை ஆட்டத்தை டிராவுடன் முடித்தார் ஆனந்த். முன்னதாக நெதர்லாந்தின் அனீஷ் கிரியுடனான முதல் சுற்றிலும் ஆனந்த் டிரா செய்திருந்தார்.
     எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் கறுப்பு நிற காய்களுடன் விளையாடவுள்ள ஆனந்துக்கு சாம்பியன் மகுடத்தை தக்கவைத்துக்கொள்ள நெருக்கடி அதிகரித்துள்ளது. தனது 3-ஆவது சுற்றில் வெஸ்லி சோவுடன் மோதுகிறார். வெஸ்லி, அனீஷ் கிரியுடனான தனது 2-ஆவது சுற்றில் டிரா செய்தார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai