சுடச்சுட

  

  ஹர்பஜன் சிங்குக்கு இன்று திருமணம்: பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை மணக்கிறார்

  By  பக்வாரா,  |   Published on : 29th October 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  23

  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கும், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவுக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுகிறது.
   இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுகிறது.
   முன்னதாக புதன்கிழமை மாலை ஜலந்தரில் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து மெஹந்தி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
   ஹர்பஜனின் திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து தில்லியில் வரும் 1ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai