சுடச்சுட

  

  இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: டுமினி பங்கேற்பது சந்தேகம்

  By  மும்பை,  |   Published on : 30th October 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  28

  இந்தியாவுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி.டுமினி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
   இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஜே.பி.டுமினி விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக இவ்விரு அணிகளிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3 ஆட்டத்தில் கேட்ச் செய்தபோது டுமினிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் லெராட்டோ மேல்குட்டு வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக கூறுகையில், "இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான 2 நாள்கள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் டுமினி விளையாடமாட்டார்.
   முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது 50 சதவீதம்தான் உறுதியாகியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி அன்று தான் இதுகுறித்த முழு விவரம் தெரியவரும்' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai