சுடச்சுட

  

  இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நியமனம்

  By  புது தில்லி,  |   Published on : 30th October 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  31

  இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் நீல் ஹாகுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
   இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் ஹாகுட் (53) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டவர்.
   ஹாகுட், கடந்த 1985-1991 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆஸ்திரேலியா ஹாக்கி அணியில் விளையாடியவர். இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஹாகுட் மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   ஹாகுட்டை மீண்டும் பயிற்சியாளராக நியமித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே இவரது பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணியின் தரவரிசை மற்றும் திறமையில் அதே பங்களிப்பை நாங்கள் மீண்டும் எதிர்பார்க்கிறோம் என்றார். உலகத் தரவரிசையில் தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணி 13ஆம் இடம் வகிக்கிறது. மேலும், 36 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai