சுடச்சுட

    

    இரண்டாவது இந்தியன் பாட்மிண்டன் லீக்: ஜனவரி மாதம் நடைபெறுகிறது

    By  புது தில்லி,  |   Published on : 30th October 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    32

    இரண்டாவது இந்தியன் பாட்மிண்டன் லீக் போட்டி வரும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.
     இந்தியன் பாட்மிண்டன் லீக் (ஐபிஎல்) போட்டியின் முதல் தொடர் கடந்த 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தில்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட 6 நகரங்களை கொண்ட அணிகள் பங்கேற்றன.
     தற்போது 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் ஐபிஎல் இரண்டாவது சீசன் வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் அதே 6 அணிகள் மீண்டும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     இப்போட்டி அறிவிப்பு நிகழ்ச்சி புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறியதாவது:
     ஐபிஎல் 2-ஆவது தொடரை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். முதல் தொடரை காட்டிலும் இந்த தொடரை சிறப்பாக நடத்துவதில் உறுதியாக உள்ளோம். சர்வதேச வீரர், வீராங்கனைகள் மட்டுமன்றி உள்ளூர் இளம் வீரர், வீராங்கனைகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில்தான் இப்போட்டித் தொடரை உருவாக்கினோம்.
     போட்டி நடைபெறும் 6 நகரங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கும் இப்போட்டியில் விளையாட உள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தில்லி, லக்னௌ ஆகிய 2 நகரங்களின் அணி உரிமையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதர அணி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அதுகுறித்த முழுமையான தகவல் வெளியிடப்படும் என்றார் தாஸ் குப்தா. இந்த நிகழ்ச்சியில் இந்திய நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், கே.ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai