சுடச்சுட

    

    கடலோரக் காவல் படையினருக்கான நீச்சல் போட்டி: கிழக்கு பிராந்தியம் சாம்பியன்

    By திருவொற்றியூர்,  |   Published on : 30th October 2015 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் நடைபெற்ற இந்திய கடலோரக் காவல் படையினருக்கான நீச்சல் போட்டியில் கிழக்குப் பிராந்திய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
    இந்திய கடலோரக் காவல்படையினர் இடையேயான நீச்சல் போட்டிகள் சென்னையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நடைபெற்றன.
    இதில், இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையிடம், கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, அந்தமான் நிகோபர் பிராந்தியங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். 9 பிரிவுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் அதிக அளவில் வெற்றிகளைப் பெற்ற சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்குப் பிராந்திய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை மேற்கு மற்றும் வடகிழக்கு அணிகள் பகிர்ந்து கொண்டன.
    புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்ட கிழக்கு கடலோரக் காவல் படை பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai