சுடச்சுட

    

    கடைசி நேரத்தில் கோல்: கொல்கத்தாவை வீழ்த்தியது தில்லி டைனமோஸ்

    By  கொல்கத்தா,  |   Published on : 30th October 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    27

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் கடைசி நேரத்தில் தாஸ் சந்தோஷ் கோல் அடிக்க, 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது தில்லி டைனமோஸ் எஃப்சி.
     ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 24-ஆவது லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா - தில்லி டைனமோஸ் எஃப்சி அணிகள் மோதின.
     மும்பை அணியுடனான கடந்த ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியதால் தில்லி டைனமோஸில் இரண்டு வீரர்களை மாற்றினார் அந்த அணியின் பயிற்சியாளர் ராபர்டோ கர்லாஸ்.
     ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தில்லி அணி கோல் வாய்ப்பை நெருங்கியது. ஃபுளோரென்ட் மலௌடா கொடுத்த பாûஸ ராபின் சிங், கோல் வலையை நோக்கி அடித்தார். ஆனால், அதனை கொல்கத்தா வீரர் அகஸ்டின் பெர்னாண்டஸ் அற்புதமாக செயல்பட்டு தடுத்தார்.
     29-ஆவது நிமிடத்தில் உள்ளூர் அணியான கொல்கத்தாவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஜெய்மி காவிலன் 19 மீட்டர் தொலைவிலிருந்து அடித்த ஷாட் இலக்கை விட்டு விலகிச் சென்றது.
     வாய்ப்புகள் கைகூடிவருவதும் பின்னர் தவறிப்போவதுமாக நகர்ந்த முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணியினரும் ஆட்டத்தின் முதல் கோலை அடிப்பதில் தீவிரமாக செயல்பட்டனர்.
     இரண்டு முறை "ஃபவுல்' செய்த காரணத்தால் 80-ஆவது நிமிடத்தில் சௌவிக்கிற்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டினார். இதனால் கடைசி நேரத்தில் தில்லி அணி 10 வீரர்களுடனேயே விளையாடியது.
     வழக்கமான ஆட்டநேரத்தில் இரு அணிகளும் கோல்கள் இன்றி சமநிலையில் இருந்தன. அப்போது காயமடைந்த நேரத்தை சரிக்கட்டுவதற்காக கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
     அந்த சமயத்தில் துரிதமாக செயல்பட்ட தில்லி வீரர் தாஸ் சந்தோஷ் ஒரு கோல் அடித்தார். கடைசி நேரத்தில் அவர் அடித்த கோலால் ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் தில்லி டைனமோஸ் எஃப்சி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி, புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது.
     இன்றைய ஆட்டம்
     எஃப்சி கோவா
     - எஃப்சி புணே சிட்டி
     நேரம் : இரவு 7 மணி
     இடம்: கோவா.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai