சுடச்சுட

  

  தென் ஆப்பிரிக்காவுடன் 2 நாள் பயிற்சி கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது

  By  மும்பை,  |   Published on : 30th October 2015 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கும், தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
   இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி-20 மற்றும் ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
   இதையடுத்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியுடன் 2 நாள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
   இப்போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:
   இந்திய லெவன் அணி: சேத்தேஸ்வர் புஜாரா (கேப்டன்), கே.எல்.ராகுல், உன்முக்த் சந்த், கருண் நாயர், ஸ்ரேயஸ் ஐயர், நமன் ஓஜா, ஹார்திக் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், நாது சிங், கரண் சர்மா, ஷெல்டன் ஜாக்சன்.
   தென் ஆப்பிரிக்கா: ஹஷிம் ஆம்லா (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ் (துணை கேப்டன்), டெம்பா பாவுமா, ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், டீன் எல்கர், சைமன் ஹார்மர், இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கெல், வெர்னான் பிலாண்டர், டேன் பெய்டிட், ககிசோ ரபடா, டேல் ஸ்டெயின், ஸ்டியான் வான் ஜைல், டேன் விலாஸ்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai