சுடச்சுட

  

  யு.எஸ். ஓபன் டென்னிஸ் சாம்பியன் பெனெட்டா ஓய்வு: ஷரபோவா, ரத்வான்ஸ்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

  By  சிங்கப்பூர்,  |   Published on : 30th October 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  29

  யு.எஸ்.ஓபன் டென்னிஸ் சாம்பியன் பிளாவியா பெனெட்டா வியாழக்கிழமை சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு மரியா ஷரபோவா, அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
   பெண்கள் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.ஏ) டென்னிஸ் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
   ஒற்றையர் ஆட்டத்தில் விளையாடும் வீராங்கனைகள் "ரெட்', "ஒயிட்' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில், சிமோனா ஹாலேப் (ருமேனியா), மரியா ஷரபோவா (ரஷியா), அக்னீஷ்கா ரத்வான்ஸ்கா (போலந்து), பிளாவியா பெனெட்டா (இத்தாலி) ஆகியோர் ரெட் பிரிவிலும், கார்பைன் முகுருஸா (ஸ்பெயின்), பெட்ரா கிவிட்டோவா (செக் குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), லூசி சஃபரோவா (செக் குடியரசு) ஆகியோர் ஒயிட் பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.
   ரத்வான்ஸ்கா வெற்றி: இதில் ஒவ்வொரு வீராங்கனையும் தங்களது பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் சுற்றின் இறுதியில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவர்.
   இதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற ரெட் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 5-ஆவது இடத்திலுள்ள ரத்வான்ஸ்கா, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலேப்பை எதிர்கொண்டார்.
   இருவருக்குமிடையே கடுமையாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் 7-6 (7/5), 6-1 என்ற செட் கணக்குகளில் ரத்வான்ஸ்கா வெற்றி பெற்றார். இருப்பினும் மரியா ஷரபோவா - பிளாவியா பெனெட்டா ஆகியோரிடையே நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஷரபோவா நேர் செட்களில் வெற்றி பெற்றால்தான் ரத்வான்ஸ்கா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழல் காணப்பட்டது.
   பெனெட்டா ஓய்வு: அந்த ஆட்டத்தில் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் யு.எஸ்.ஓபன் சாம்பியனான பிளாவியா பெனெட்டாவை, ஷரபோவா வெளியேற்றினார். இதன் மூலம் ரெட் பிரிவிலிருந்து ஷரபோவா, ரத்வான்ஸ்கா ஆகிய இருவரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஒயிட் பிரிவில் கார்பைன் முகுருஸா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இந்த தொடருடன் பிளாவியா பெனெட்டா ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி ஷரபோவாவுடன் விளையாடியதே அவருக்கு கடைசி ஆட்டமாக அமைந்தது. ஓய்வு பெற்ற பெனெட்டாவுக்கு சக வீராங்கனைகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai