சுடச்சுட

  

  2 நாள் பயிற்சி ஆட்டம்: 296 ரன்களுக்கு வாரியத் தலைவர் அணி ஆல் ஆவுட்!

  By DN  |   Published on : 30th October 2015 05:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கும், தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் வாரியத் தலைவர் லெவன் அணி, 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி-20 மற்றும் ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

  இதையடுத்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியுடன் 2 நாள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. 

  டாஸ் வென்ற வாரியத் தலைவர் லெவன் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் 155 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நாயர் (44 ரன்கள்), ஓஜா (52), பாண்டியா (47) ஆகிய வீரர்கள் ஓரளவு நன்றாக ஆடினார்கள். பிறகு அந்த அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேஎல் ராகுல் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் ஸ்டெயின் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

  பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai