சுடச்சுட

  

  2016 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தில் நடைபெறுகிறது

  By  புது தில்லி,  |   Published on : 30th October 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2016ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெறுகிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
   ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆலோசனை கூட்டம் சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் அதன் செயலாளர் அனுராக் தாகூர் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:
   அடுத்த ஆண்டு இந்தியாவில் டி-20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.
   ஆசிய கோப்பை டி-20 போட்டி, ஆசிய நாடுகளுக்கு முக்கியமானதாகும். பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பருவமழை காலமாக இருப்பதால் இப்போட்டியை வங்கதேசத்தில் நடத்துவதற்கு ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
   வரும் 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (50 ஓவர்) போட்டி இந்தியாவில் நடத்தப்படும்.
   டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளின் ஏ அணிகளுடன், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் விளையாடும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
   ஆசியக் கண்டத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai